எனக்கு ரொம்ப நாளாவே ஒரு டவுட் உண்டு. ஒரு குவார்ட்டர் அடிச்சிட்டு யோசிக்கலாமோனு தோணும். அப்புறம் போதை இறங்கிட்டா இன்னொரு குவார்ட்டர் வாங்கணுமேன்னு கவலையும் வரும். அதனால... என்னடா இழுவை? மேட்டருக்கு வாடான்னு நீங்க சொல்றது கேட்குது!
சரி...எல்லாம் பொண்னுங்க மேட்டர்தான். ( மேட்டர் குவார்ட்டர்ல ஆரம்பிக்கும்போதே தெரிஞ்சுருக்குமே!)
காதலிக்க யாருமே கிடைக்கலேன்னு சொல்ற ஆளு நான் இல்ல. எனக்கு ஒரே ஒரு காதல்தான். ஆட்டோகிராப் மாதிரி மூணு பேருக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுக்கவேண்டிய அவசியம் இல்ல. அதமாதிரியே எனக்கு தோழிகள் சிலர் உண்டு. அதுவும் ரொம்ப கவனமா செலக்ட் பண்ணித்தான் பேசுவேன்.
அவனவன் கேர்ள்ஃபிரண்ட் கிடைக்காம, அரிசிய அவன் வயித்துல வச்சாலே போதும் அந்த அளவுக்கு வயிறு எரிஞ்சு கிடக்கிறானுவ. இதுல என்ன செலக்ட் வேண்டிகிடக்குன்னு கேட்காதீங்க.
என்னுடைய தோழிகள் அப்படி கிடையாது. வித்யாசமானவங்கன்னுசொல்வாங்களே... அப்படித்தான்... ஒவ்வொருவரும் ஒரு வகையில என்னை யோசிக்க வச்சவங்க.
அதுல ஒரு தோழி கடந்த பிரண்ட்ஷிப் தினத்துல அவரே போனில் அறிமுகமானாங்க. ஒரு வருஷமா அவங்கள நேர்ல பாத்திருக்கிறேன். அப்போது பேசாதவங்க இப்போது பேசக்காரணம்? அவங்ககிட்டேயே கேட்டேன்.
அவர் சொன்னது - ''இத்தனை நாட்களாக உங்களப் பத்தி விசாரிச்சேன். பேசணும்னு தோணும். ஆனா நீங்க பேசாம போயிட்டா வருத்தமாயிடுமேன்னு அமைதியா இருந்திடுவேன். அதான் இன்னைக்கு போன்ல கூப்பிட்டேன்""
இப்படி சொன்னவர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போன்ல பேசுனாங்க. இதுல நான் பேசுனது 'ம்'ங்கிற வார்தைதான் அதிகம். அவங்களாகவே பேசிட்டு வச்சாங்க. அதுக்கு பிறகு டெய்லி என்கிட்ட பேசணும் போன் பண்ணுவாங்க. நான் எடுக்கவே மாட்டேன்.
போன் பண்ணுனா ஏன் எடுக்கலேன்னு நேரா வந்து சண்டை போடுவாங்க. அவங்க என்கிட்ட பேசுனதவிட சண்டை போட்டதுதான் அதிகம். அத மாதிரி வேற பொண்ணுங்ககிட்ட பேசுனாலும் அவங்களுக்கு பிடிக்காது. 'அவகிட்ட என்ன பேச்சுன்னு எஸ்.எம்.எஸ்.வரும். நான் ஆபிஸ்ல என்ன பண்றேன்னு தெரிஞ்சுக்க உளவாளி வச்சுக்கிற விஷயம் அப்பதான் தெரிஞ்சது...
என்னடா வம்பா போச்சேன்னு அவங்கள நேர்ல கூப்பிட்டேன். வர்ல. போனுல பேசினாங்க. ஏன் இப்படின்னு கேட்டேன். நான் உங்கள ப்ரண்டாத்தான் நினைக்கிறேன். மத்தபடி ஒண்ணுமில்லேன்னு சொன்னாங்க. இனிமே இப்படி நடக்காதீங்க. இல்லேன்னா என்கிட்ட பேசாதீங்கன்னு சொன்னேன். அவங்களும் பேசுறதில்ல... ரொம்ப நல்ல பொண்ணுதான்.
அட்வைஸ் பண்ணிட்டு நான் அமைதியாயிட்டேன். ஆனா, அவங்க பேசாம இருந்தாக்கூட என்னை இன்னும் ஃபாலோ பண்ற விஷயத்த கண்டுபுடிச்சிட்டேன். அதுக்குப்பிறகு நடந்ததுதான் சஸ்பென்ஸ்...
ஏன் பொண்ணுங்க இப்படி இருக்காங்கன்னு ஒருவாரத்துக்கு முன்னாடி அறிமுகமான தோழிகிட்ட கேட்டேன். அவங்க சொன்னத கேட்டு இன்னும் கலக்கம்.
அத அப்புறமா சொல்றேன்.
Wednesday, February 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment